புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள துவரவயல் கிராமத்தில் திருநாவுக்கரசு (31) என்பவர் தனது மனைவி வினிதா என்பவருடன் வசித்து வருகிறார். கணவர் நேற்றைய தினத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசரின் உடலை பார்த்த அவரது மனைவி பெரும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை மீட்டு உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சி உள்ளாகியுள்ளனர். நேற்று நிகழ்ந்த குடும்ப தகராறின் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மனைவியும் இறந்த கணவனை கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.