fbpx

நிவாரண தொகைக்காக ஒடிசா ரெயில் விபத்தில் கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி

நிவாரணத் தொகையை பெறுவதற்காக ஒடிசா ரெயில் விபத்தில் கணவர் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில், மற்றும் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்தார். மேலும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், ரெயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது கணவர் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்ததாக கூறி நிவாரணத் தொகையை பெறுவதற்காக பெண் ஒருவர் நாடகமாடி வசமாக மாட்டியுள்ளார். கட்டாக் மாவட்டம் மணிபண்டாவைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா என்ற பெண்ணின் கணவர் பிஜய் தத்தா. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கீதாஞ்சலி தனது கணவர் பிஜய் தத்தா ஒடிசா ரெயில் விபத்தில் இறந்துவிட்டதாக கூறியதோடு, அங்கிருந்த ஒரு உடலை தனது கணவருடையது என்றும் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், அவர் பொய் சொல்கிறார் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர். இந்த நிலையில் தான் மரணித்து விட்டதாக பொய் சொல்லி, பொதுப் பணத்தை அபகரிக்க முயன்ற கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கணவர் பிஜய் தத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார். நிவாரணத் தொகைக்காக கணவன் இறந்ததாக நாடகமாடிய பெண் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Rupa

Next Post

இடிந்த கட்டிடங்களில் அதிகாரிகள் குடியிருப்பீர்களா..??

Wed Jun 7 , 2023
ராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 259 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் RS மங்களம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல் பாம்பு கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான […]

You May Like