fbpx

#காஞ்சிபுரம் : தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த மனைவி..!

காஞ்சிபுரம் பகுதியில் பூபாலன் என்கிற துணிக்கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குடிசை நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மனைவி சூர்யாவினை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். 

தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளான நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சூர்யா மிகவும் மன வேதனையுடன் இருந்துள்ளார். இத‌னிடையே சென்ற 19ஆம் தேதி அன்று மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

இது பற்றி கணவர், மாமனாரிடம் செல்போனில் தகவல் கூறியுள்ளார். மகளின் மரணத்தில் ஏதோ இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்ததினை தொடர்ந்து சூர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 

புகாரின் பேரில் சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Rupa

Next Post

’யாரு சாமி நீங்க’ மொமண்ட்..!! ஆடு, கோழி, நாயுடன் ஒரு Ride..!! நெட்டிசன்களின் வாயை பிளக்க வைத்த வீடியோ..!!

Thu Nov 24 , 2022
விநோதமான, விசித்திரமான நிகழ்வுகளின் உறைவிடமாகவே இருக்கிறது சமூக வலைதளங்கள். அதுவும் சாலைகளில் நடக்கும் பல நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் பலவும் சோஷியல் மீடியாக்களில் பட்டையக் கிளப்ப தவறுவதில்லை. அந்த வகையில், இந்தியாவின் சாலையில் ஒரு பைக்கில் வண்டி ஓட்டுபவரை தவிர 6 பேர் பயணித்ததோடு, அந்த பைக்கில் இரண்டு நாய்களும், ஒரு கோழியோடு சேர்த்து சில பல மூட்டைகளையும் பைக்கின் பக்கவாட்டில் மாட்டியும் சென்ற வீடியோதான் நெட்டிசன்களை வாயை பிளக்க […]
’யாரு சாமி நீங்க’ மொமண்ட்..!! ஆடு, கோழி, நாயுடன் ஒரு Ride..!! நெட்டிசன்களின் வாயை பிளக்க வைத்த வீடியோ..!!

You May Like