fbpx

#திண்டுக்கல்: கணவனை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சந்தப்பேட்டையில் நவீன் குமார் (32) என்ற இளைஞர் சென்ற அக்டோபர் மாதம் 20ஆம் தேதி வேடச்சந்தூர் அடுத்த கோடாங்கிப்பட்டியின் அருகில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், நவீன்குமாரின் மனைவியான விஜயசாந்தி (25), என்பவர் தனது ஆண் நண்பர் சிவா(26) என்பவரோடு சேர்ந்து நவீன்குமாரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து , காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கைதான சிவா , விஜயசாந்தி ஆகியோரின் குற்றத்தினை ஒடுக்கும் பொருட்டு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் சிவா மற்றும் விஜயசாந்தி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை பகுதியில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

Baskar

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! உடனே கிளம்புங்க..!! இல்லையென்றால், மீண்டும் உயரும் அபாயம்..!!

Thu Dec 15 , 2022
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் 4-ஆம் நாளான இன்று தங்கம் விலை சரிந்து காணப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தினசரி ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து […]

You May Like