ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவும் அவரது மனைவி முகுந்தாவும் வசித்து வந்தனர். உதய்சாய் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் பக்கத்து வீட்டில் குடியேறினர்.
வெங்கையா பணிபுரிந்த ஒர்க்ஷாப் தொழிற்சாலையில் உதய்சாயும் பணிபுரிந்ததால், இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்கள். அதேபோல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெங்கையாவின் மனைவி முகுந்தாவை உதய்சாய் காதலித்து வந்தார்.
இதையறிந்த முகுந்தாவின் கணவர் வெங்கையா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் வெங்கையாவைக் கொல்ல முடிவு செய்ததால், புத்தாண்டு தினத்தன்று வெங்கையாவை மது விருந்துக்கு அழைத்தார் உதய்சாய். பின்னர், அப்பகுதியில் உள்ள கால்வாய் பகுதிக்கு சென்றனர்.
முன்னரே தூக்க மாத்திரை கலந்த பானத்தை வெங்கையாவுக்கு கொடுத்துள்ளனர். அதைக் குடித்த வெங்கையா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மனைவி உதய்சாயுடன் சேர்ந்து கணவரை கால்வாய் நீரில் அழுத்தி மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி வெங்கையாவின் மனைவி முகுந்தாவிடம் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால் முகுந்தா, உதைசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.