fbpx

‘இனி விஜயுடன் ஈடுபாடு இருக்கும்’..!! தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன குட் நியூஸ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் தனது பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை கடந்த மே மாதம் 27ஆம் தேதி சந்தித்தார். இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், தனது பெற்றோரை சந்தித்துள்ளார்.

நடிகர் விஜய் பல ஆண்டுகளாகவே நேரடி அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக விஜய்க்கும் அவரது தந்தையுமான இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகருக்கும் இடையில் ஒரு சில கருத்து மோதல்கள் இருந்து வந்ததாகவும், இதனால் இருவரும் சரியாக பேசிக்கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் குறித்து சில சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். தந்தை சந்திர சேகருடன் சரியாக பேசவில்லை என்றாலும், தாயார் ஷோபாவுடன் தொடர்ந்து சந்திப்பது, அவருடன் நேரம் செலவிடுவது, அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்து வந்தார் விஜய். சமீபத்தில் கூட சென்னையை அடுத்துள்ள கொரட்டூரில் நடிகர் விஜய் தனது தாயாருக்காக சாய் பாபா கோயிலைக் கட்டினார்.

இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது பெற்றோரை சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவ்வப்போது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு நடிகை விஜயின் தாயார் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு எஸ் .ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் ஒன்றாக வந்திருந்தனர்.

இதையடுத்து, அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், “நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி தொடங்கியிருப்பதற்கு என்னுடைய வாழ்த்துகளும், ஆசிர்வாதமும் என்றும் மகனுக்கு உண்டு. இனி விஜயுடன் ஈடுபாடு இருக்கும்” என்றார். நடிகர் விஜய் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ. சந்திரசேகர் தனது மனைவியுடன் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் இதை தெரிவித்திருப்பது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : புயலில் அடித்துச் செல்லப்பட்ட கார்..!! ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு கார் பரிசு..!! இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..!!

English Summary

As Vijay celebrates his 50th birthday on June 22, he met his parents.

Chella

Next Post

மாஸாக வெளியான 'புஷ்பா2' படத்தின் இரண்டாவது பாடல்..!! வீடியோ உள்ளே..!!

Wed May 29 , 2024
Rashmika Mandhana's 'Couple Song' from Allu Arjun starrer 'Pushpaa 2' is out.

You May Like