fbpx

பாஜக-விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா? – 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை!!

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், 240 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.

கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் 543 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், 240 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆனால், பாஜக, தெலுங்கு தேசம் அடங்கிய என்.டி.ஏ கூட்டணியில் 310 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. 2014 மற்றும் 2019ல் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது குறிப்பிடத்தக்கது.

English Summary

english summary

Next Post

ஈரோட்டில் திமுக டாப்..!! 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர்..!! பரிதாப நிலையில் பாஜக..!!

Tue Jun 4 , 2024
While DMK candidate Prakash is leading in Erode constituency, AIADMK candidate Potenika Ashokumar has taken the second position.

You May Like