இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கும் நிலையில், அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தோனிக்காகவே தமிழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாக செல்கிறார்கள். இந்நிலையில், தோனி இந்த வருடம் ஐபிஎல் போட்டியோடு ஓய்வு பெறுவதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆனால், தோனி அடுத்த வருடம் விளையாடுவேன் என அவரே ஒரு பேட்டியில் மறைமுகத்தன்மையாக கூறினார். இந்நிலையில், தோனியுடன் நீண்ட நாட்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா தற்போது எம்.எஸ்.தோனி நல்ல நிலையில் இருப்பதால் அவர் கண்டிப்பாக அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என கூறியிருக்கிறார். ச்தோனி நல்ல உடல் நிலையில் இருப்பதால் கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடி சிஎஸ்கே அணியை வழி நடத்திச் செல்வார் என்று கூறினார். மேலும், குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா ஒரு திறமையான வீரர். அவர் கண்டிப்பாக இந்திய அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.