அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய போட்டியாளர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு குழு என்பது, நோபல் பரிசு வெற்றியாளர்களை தீர்மானிக்கும் குழுவாகும். இந்த குழு இந்தியா வந்துள்ள நிலையில், அக்குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், உலகின் அமைதியின் மிகவும் நம்பகமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்று கூறினார். தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.. பிரதமர் மோடி இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள விஷயங்களில் பங்களித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்..
பிரதமர் மோடியின் ஆட்சியைப் பாராட்டிய அவர், மோடியின் கொள்கையால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக மாறி வருகிறது என்று கூறினார். இந்தியாவை அமைதியின் மரபு என்று கூறிய அஸ்லே டோஜே, இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி மிகவும் நம்பகமான தலைவர் என்றும், அவரால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் கூறினார். எனவே அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் மிகப்பெரிய போட்டியாளர் என்று தெரிவித்துள்ளார்..