எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2022 தேர்வு, ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஏப்ரல் 6-ல் தொடங்கிய நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது. கடந்த ஆண்டை போலவே ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது..
இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 17-ம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.. நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.. எனவே நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு 17-ம் தேதி நடைபெறுமா என்பது உச்சநீதிமன்ற விசாரணைக்கு பின்னரே தெரியவரும்..
முன்னதாக நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.. ஒரே தேதியில் பல தேர்வுகள் நடப்பதால் நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில், நீட் இளநிலை தேர்வை எந்த காரணத்தை கொண்டும் தள்ளி வைக்க முடியாது என்றும் தேர்வு முகமை விளக்கமளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..