fbpx

பாம்புகள் பழிவாங்குமா?. இளம்பெண்ணை 11 முறை கடித்த கருப்புப்பாம்பு!. ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Snake: உத்தர பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் இளம்பெண்ணை கருப்புப் பாம்பு ஒன்று 11 முறை கடித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களில் வருவது போல் பாம்புகள் ஒருவரைப் பழிவாங்குவதும், அவரைப் பின்தொடர்வது நிஜ வாழ்க்கையில் சிலருக்கு ஏற்படுகிறது. இதனை பாம்புகள் பழிவாங்குவதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறது. இருப்பினும், அறிவியல் பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் 19 வயது இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக கருப்பு பாம்பு ஒன்று 11 முறை கடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவின் சர்காரி தாலுகா பஞ்சம்புரா கிராமத்தை சேர்ந்தவர் தல்பத். இவரது மகள் ரோஷினி. 19 வயதான இவரை, கடந்த 2019ம் ஆண்டு வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, தவறுதலாக பாம்பை மிதித்தபோது இளம்பெண்ணை அந்த பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காப்பாற்றப்பட்டுள்ளார்.ஆனால், தற்போதுவரை அந்த பாம்பு இளம்பெண்ணை பின் தொடர்ந்து கடிப்பதாக அவரது தந்தை தல்பத் கூறியுள்ளார். 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ரோஷினியை அந்த கருப்பு பாம்பு 11 முறை கடித்துள்ளதாகவும், உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலும் விடுவதில்லை என்றும் தல்பத் கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறை பாம்பு கடித்த பின்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்திய சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாகவும், இதையடுத்து இளம்பெண் ஜான்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தல்பத் கூறியுள்ளார். மேலும், பாம்பு கடிக்காமல் இருக்க பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனளிக்கவில்லை என்றும் இந்த தொடர்ச்சியான சம்பவம் பயத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தல்பத் கவலை தெரிவித்துள்ளார்.

Readmore: மக்களே…! வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 10-ம் தேதி முதல் கனமழை…!

Kokila

Next Post

விவசாயிகளே!. பிஎம் கிசான் நிதி ரூ.12,000 ஆக உயருகிறதாம்?. நிதி அமைச்சர் ஆலோசனை!

Sun Dec 8 , 2024
PM Kisan: நாட்டில் விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் சம்மன் நிதியின் தொகை இரட்டிப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் போலவே, 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த 6ம் தேதி […]

You May Like