யுபிஐ கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்று வெளியான செய்திகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது..
யுபிஐ அடிப்படையிலான நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளில் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ரிசர்வ வங்கி ஆய்வு செய்து வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.. IMPS, NEFT, RTGS, UPI போன்ற பரிவர்த்தனை முறைகளில் பணம் செலுத்த கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.. எனவே விரைவில் யுபிஐ போன்ற பரிவர்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று கூறப்பட்டது..
இந்நிலையில் யுபிஐ கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கலாம் என்று கூறப்படும் செய்திகள் குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.. அந்த பதிவில் “ யுபிஐ (UPI – யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) என்பது ஒரு “டிஜிட்டல் பொது நன்மை” ஆகும்.. UPI சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை. நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் சுற்றுச்சூழலுக்கு அரசாங்கம் நிதியுதவி அளித்துள்ளது.. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்த ஆண்டும் உதவிகளை அறிவிக்கப்பட்டுள்ளது.. என்று தெரிவித்துள்ளது..
மத்திய அரசின் இந்த விளக்கத்தின் மூலம் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது என்று தெரிகிறது..