fbpx

இடி மின்னலுடன்..!! இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை மையம் அலர்ட்..!!

வடதமிழக கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று நாகை, மயிலாடுதுறை திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல் நாளை (ஜனவரி 10) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’எல்லா கோரிக்கையும் நிறைவேற்றியாச்சு’..!! ’95% பேருந்துகள் இயக்கம்’..!! அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு தகவல்..!!

Tue Jan 9 , 2024
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பல மாவட்டங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசியல் காரணங்களுக்காக போக்குவரத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்துவது திசை திருப்புகின்ற செயல். குறிப்பாக இதற்கெல்லாம் […]

You May Like