fbpx

DMK கூட்டணியில் இருந்து விலகல்..!! அதிமுகவில் இணைந்தது ஃபார்வட் பிளாக் கட்சி..!! தேனியில் போட்டி..?

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள அதிமுக, மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், புரட்சித் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் இணைத்துள்ளது.

மேலும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று தேமுதிகவுடன் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து பாமகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைவதாக உறுதியளித்துள்ளன. இதனால் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி, அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்துள்ளது. இன்று எடப்பாடி பழனிசாமி உடனான பேச்சுவார்த்தையில் கூட்டணியை உறுதி செய்த ஃபார்வட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன், தேனி அல்லது ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வலியுறுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவியை வைத்து முக்குலத்தோர் வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற பாஜகவின் கணக்கிற்கும், இந்த கூட்டணி முட்டைக்கட்டை போட்டுள்ளது.

Read More : ADMK | அதிமுகவுக்கு தேடி தேடி வரும் ஆதரவு..!! அரவணைத்துக் கொள்ளும் எடப்பாடி..!! அதிர்ச்சியில் பாஜக..!!

Chella

Next Post

Annamalai | 'இந்த வேட்பாளர்களுக்கே முன்னுரிமை'..!! டெல்லி செல்லும் முன் ட்விஸ்ட் வைத்து சென்ற அண்ணாமலை..!!

Wed Mar 6 , 2024
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை டெல்லி தலைமையிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தமிழக வேட்பாளர்கள் குறித்து டெல்லியில் உள்ள பாராளுமன்ற தேர்தல் குழு முடிவெடுப்பார்கள். நாங்கள் 39 தொகுதிகளிலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியலை வழங்க சென்று கொண்டிருக்கிறோம். கீழே தொண்டர்கள் சொல்வதை மேலே கொண்டு செல்வது தான் எங்களுடைய வேலை. 39 தொகுதிகளுக்கும் […]

You May Like