அக்டோபர் 21 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாலை 4:10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையில் ஆடைகள் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதை வைரலான வீடியோவில் காணலாம்.
அருகில் இருந்த ஒருவர் அவரை காப்பாற்ற முயன்றார், ஆனால் பலனில்லை, அந்த பெண் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்டார். ரயில் வேகமாகச் சென்று அந்த பெண்ணை பிளாட்பாரத்தின் தண்டவாளத்தின் விளிம்பிற்கு இழுத்துச் சென்றது.
பின்னர், ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த வீடியோவில், பயணிகளைக் காப்பாற்றவோ அல்லது ரயில் ஓட்டுநருக்கு உடனடியாக பிரேக் போடவோ அல்லது ரயிலை நிறுத்தவோ ரயில் நிலையத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
காயம் அடைந்த பெண் கவுரி குமாரி சாஹூ அந்தேரியில் உள்ள செவன் ஹில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ஒன் நிர்வாகம் அவரது மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்தது.
இதற்கிடையில், சாஹு மெட்ரோ ஒன் நிறுவனத்திற்கு எதிராக சாகலா காவல் நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் காயத்திற்கு காரணமான மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.