சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், தான் ஆர்டர் செய்த உணவில் புழுக்கள் இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் கூறியதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகத் தடை விதித்தனர்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ராணி என்ற பெண், திங்கள்கிழமை தனது மகனுடன் நேற்று முன்தினம் மாலை சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வரும் தனியார் சைவ உணவகத்தில் சோலா பூரி ஒன்று ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அப்போது அதை சாப்பிட முற்பட்டபோது, அதில் புழு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ராணி, உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்குப் பிறகு, அதிகாரிகள் உணவகம் மற்றும் சமையலறையின் செயல்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை விதித்தனர். மேலும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இந்தப் பிரச்னை தொடர்பாக உணவக உரிமையாளரை எச்சரித்தனர்.