fbpx

ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை! காரில் இருந்து குதித்த இளம் பெண் 10 மாத குழந்தை பரிதாப பலி!

நாட்டில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.ஆனால் இது போன்ற தகவல்களை கேள்விப்படும் போதெல்லாம் இந்த நாட்டின் மீதும், அரசாங்கத்தின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய கோபக்கனலை வீச தான் செய்கிறார்கள்.அரசாங்கம் என்னதான் இது போன்ற தவறுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றினாலும் அவற்றையும் கடந்து இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கிராமப்புறங்களில் இருக்கும் மக்களிடம் விபரம் மாற்ற நிலை இருப்பதால் அவர்கள் அரசாங்கத்தின் மீது கோபப்படுகிறார்களோ என்று படித்த இளைஞர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டால், அவர்கள் தெரிவிக்கும் ஒரே கருத்து இந்த நாட்டில் சிஸ்டம் சரியில்லை இன்று ஒரே வார்த்தையில் தெரிவித்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் ஒரு இளம் பெண்ணை அவருடைய கார் ஓட்டுனரே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பி செல்வதற்கு முயற்சித்த அந்த பெண் ஓடும் காரிலிருந்து குதித்திருக்கிறார். இதனால் அவர் படுகாயமடைந்தார் ஆனால் அவருடைய 10 மாத குழந்தை உயிரிழந்தது.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் நகர் அருகே மும்பை -அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை நடந்திருக்கிறது. அதாவது வேகமாக போய்க் கொண்டிருந்த ஒரு காரிலிருந்து ஒரு இளம் பெண் தன்னுடைய 10 மாத குழந்தையுடன் திடீரென்று குதித்துள்ளார். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த மகராஷ்டிரா மாநில காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததால் அந்த இளம் பெண் காரிலிருந்து குதித்ததாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த கார் ஓட்டுநர் விஜய் குஷ்வாகா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நபரை காவல்துறையினர் தேடி வருவதுடன், தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தும் வருகிறார்கள் என்று காவல்துறையின் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

#பெரம்பலூர்: திருமணம் ஆன வாலிபர்.. சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..!

Mon Dec 12 , 2022
பெரம்பலூர் மாவட்ட பகுதியில் உள்ள வயலப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமிக்கும் முகேஷ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில காலங்களில் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் சிறுமிக்கு பாதிக்கப்பட்ட அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 […]

You May Like