fbpx

கோவை| செல்போனில் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருந்ததால் ஆத்திரம்…..! 2வது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன்……!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதுரை வீரன் இவருக்கும் வீரம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், வீரம்மாள் வேறொரு நபருடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இவர் கோவை வேராண்டிபாளையம் பகுதியில் டைலர் வேலை பார்த்து வந்தார்.

அதேபோன்று தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு உணவகத்தின் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் சித்ரா வேலை பார்த்து வந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு செல்லும்போது சித்ராவுக்கும், மதுரை வீரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மதுரை வீரன் மட்டும் வேலைக்கு சென்று வர சித்ரா வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே சித்ரா அடிக்கடி கைபேசியில் உரையாடி வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கேட்டபோது உறவினருடன் பேசுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் குடித்துவிட்டு பிறந்த மதுரவீரன் சித்ராவிடம் இது குறித்து வாக்குவாதம் செய்திருக்கிறார். சித்ராகவும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது.

இதில் மதுரை வீரன் சித்ராவை மிதித்து, அருகில் கிடந்த கத்திரிக்கோலை எடுத்து சித்ராவின் வயிற்றில் குத்தி இருக்கிறார். ஆகவே சித்ரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி நிலக்கோட்டை சென்று அந்த பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார் மதுரை வீரன்.

அங்கு மதுரை வீரன் வழங்கிய தகவலை எடுத்து தடாகம் காதல் துறையினர் அவர்கள் இருவரும் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Next Post

தமிழ்நாட்டில் முன்கூட்டியே திறக்கப்பட்ட பள்ளி..!! எங்கு தெரியுமா..? எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..!!

Thu Jun 1 , 2023
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்ன. இதையடுத்து, ஜூன் 7ஆம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதற்கிடையே, […]

You May Like