fbpx

“புருஷன விட கள்ளக்காதலன் தான் சார் எனக்கு முக்கியம்” கள்ளக் காதலுக்காக 54 வயது பெண் செய்த கொடூரம்..

திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள, குருவிகுளம் காட்டுப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகில், 2 மது பாட்டில்கள் கிடந்ததால் யாரேனும் கொலை செய்தனரா? அல்லது மது போதையில் கீழே விழுந்து அடிபட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் எரியோடு அருகே உள்ள காளனம்பட்டியை சேர்ந்த 54 வயதான நாச்சிமுத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும், கூலி வேலை செய்து வரும் இவருக்கு 45 வயதான காளியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், மாங்கரை நடுப்பட்டியை சேர்ந்த கிருபாகரன் என்பவருக்கும், நாச்சிமுத்துவின் மனைவி காளியம்மாளுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், இவர்களின் உறவு குறித்து நாச்சிமுத்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நாச்சிமுத்து தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி இருவரும் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளனர். தனது கணவனால் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை என்று வருத்தப்பட்ட காளியம்மாள், தனது கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி, நாச்சிமுத்துவும் காளியம்மாளும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உறவினரை பார்க்க சென்றுள்ளனர். இந்த தகவலை காளியம்மாள் கிருபாகரனுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நாச்சிமுத்துவை கிருபாகரன் ஒன்றாக மது குடிக்கலாம் என்று கூறி மாமுகோவிலூர் பிரிவு அருகே உள்ள குருவிகுளம் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். நாச்சிமுத்து மது போதையில் இருந்த போது, கிருபாகரன் தான் மறைத்து வைத்திருந்த கட்டையால் நாச்சிமுத்துவின் தலையில் அடித்து படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். நாச்சிமுத்துவின் மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: ஆண்களே உஷார்!!! கொதிக்கும் தண்ணீரை கணவன் மீது ஊற்றிய மனைவி.. ஆண் நண்பர்களால் நேர்ந்த சோகம்..

English Summary

woman killed her husband for lover

Next Post

கேஸ் சிலிண்டர் வெடித்து 6 ஐயப்ப பக்தர்கள் பலி.. 3 பேர் நிலமை கவலைக்கிடம்..!! சபரிமலைக்கு சென்ற போது விபரீதம்..

Sun Dec 29 , 2024
6 Ayyappa devotees have died in an accident in Uppalli, Karnataka. 3 others have been admitted to the intensive care unit.

You May Like