தர்மபுரி மாவட்டம் கங்காபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சின்னபையன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே ஜெயலட்சுமி ரத்த காயங்களுடன் இரண்டு காதுகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் வயலில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கூத்தப்பாடியை சேர்ந்த பூசாரி மாதன் தான் ஜெயலட்சுமியை தாக்கி நகைகளை பறித்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், கணவர் இறந்த பிறகு ஜெயலட்சுமி, மாதனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஜெயலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாதன் ஜெயலட்சுமியை தாக்கியுள்ளார்.
அதனால் அவர் மயங்கி விழுந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி இறந்துவிட்டதாக நினைத்து, அவரது இரு காதுகளையும் அறுத்து நகைகளை திருடிச் சென்றதாகவும் மாதன் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.