மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள அமராவதியில் ஹாஸ்டலில் தங்கி மாணவி ஒருவர், பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவருக்கும் ஒரு ஆண் நண்பர் ஒருவருக்குமிடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. நாள் போக போக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனிடையில் மாணவியிடம் போனில் பேசிய அந்த இளைஞர், ‘உன்னுடைய அரை நிர்வாண போட்டோவை அனுப்பு’ என்று கேட்டுள்ளான்.
இதன்பின்னர் அந்த பெண்ணும் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளம் மூலமாக இளைஞருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு பிறகு, தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என்று இளைஞன் பெண்ணை மிரட்டியுள்ளான். அதிர்ச்சியடைந்த மாணவி, அவரது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் சைபர் கிரைமில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் , அந்த இளைஞரின் இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் கணக்கை முடக்கி வைத்தனர். இது பற்றி காவல்துறையினர் பேசியதில் , ‘சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக்கம் ஏற்பட்டதால் , அந்தப் பெண் ஏமாற்றப்படிருக்கிறார். மேலும் இளைஞர் கைது செய்துள்ளார் என்றார்.