fbpx

தினமும் குடித்துவிட்டு வந்து சண்டையிட்ட கணவன்.! செங்கலால் கொடூரமாக தாக்கி கணவன் கொலை.! சரணடைந்த மனைவி.!!

தர்மபுரி அருகே மது போதையில் கொடுமை செய்த கணவனை செங்கலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது மனைவியே காவல்துறையிடம் சரண் அடைந்து வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே இருக்கும் கால்வாயில் ரத்த காயங்களுடன் சடலமாக கடந்திருக்கிறார் ராஜா. இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் அவரது உறவினர்களே உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் புதைக்கப்பட்ட ராஜாவின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உடற் கூறு ஆய்வில் ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் ராஜாவின் மனைவி கனகா காவல்துறையிடம் சரண் அடைந்திருக்கிறார்.

மேலும் அவரளித்த வாக்குமூலத்தில் தனது கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து தன் மீது சந்தேகப்பட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த தினத்தன்று குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அவரை செங்கல்லால் அடித்துக் கொலை செய்ததாகவும் அவர் இறந்ததும் உடலை இழுத்துச் சென்று கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

இந்தியாவில் பரவியது சீன நிமோனியா?… மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!

Fri Dec 8 , 2023
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் பாக்டீரியா பாதிப்புகள் சீனாவில் நிமோனியா நோயாளிகளின் சமீபத்திய அதிகரிப்புடன் தொடர்புடையவை என்று பரவும் செய்திகள் தவறானவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அண்மையில் ஒரு தேசிய நாளிதழில் வெளியான செய்தி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சீனாவில் அண்மையில் அதிகமாக காணப்பட்ட நிமோனியா பரவலுடன் தொடர்புடைய ஏழு பாக்டீரியா பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக […]

You May Like