fbpx

ஆசைக்கு இடையூறு.! 1 1/2 வயது குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர தாய்.! விசாரணையில் வெளியான உண்மை.!

கர்நாடக மாநிலத்தில் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்ததால் 1 1/2 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நாடகம் ஆடிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ராமநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மா(21). திருமணமான இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் பாக்கியம்மா வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றில் துணி துவைப்பதற்காக வந்திருக்கிறார் பாக்கியம்மா.

அப்போது குழந்தை ஆற்றில் தவறி விழுந்து விட்டதாக கூச்சல் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் குழந்தையை மீட்க போராடிய முடியவில்லை. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்களின் துணையுடன் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. எனினும் குழந்தையின் இறப்பு தொடர்பாக காவல்துறைக்கு தாயின் மீது சந்தேகம் வந்தது.

இதனைத் தொடர்ந்து தாயிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் குழந்தையை ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். மேலும் தனது கள்ளக்காதல் உறவிற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் அதனை ஆற்றில் வீசி கொலை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Next Post

தப்லீக் ஜமாத் நிதி ஒதுக்கீடு.! காங்கிரசுக்கு கண்டனத்தை பதிவு செய்த பாஜக எம்எல்ஏ.! வெடித்த சர்ச்சை.!

Thu Dec 21 , 2023
ஜனவரி மாதம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தெலுங்கானா அரசு 2.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. இது தொடர்பாக பிஜேபி எம்எல்ஏ ராஜா சிங் என்பவர் கூறியகருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் விகாராபாத் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு தெலுங்கானா சிறுபான்மை நலத்துறை […]

You May Like