fbpx

“உல்லாசமா இருந்தா போதும், குழந்தை வேண்டாம்”; பெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..

விருதுநகர் ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காலி இடத்தில், பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, பிறந்து 2 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருதுநகர் மகளிர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், குழந்தையின் தாய் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியான கல்லுாரி மாணவி என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியிடம் குழந்தையின் தந்தை யார் என விருதுநகர் மகளிர் போலீசார் விசாரித்ததில் ஆமத்துாரைச் சேர்ந்த 35 வயதான விவேக் என்பது தெரியவந்துள்ளது. விவேக்கின் வீட்டில், சிறுமி குடியிருந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தையை பெற்றுள்ளார். பின்னர், அவர் அந்த குழந்தையை காலிமனையில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. போலீசார் விவேக் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read more: உடம்பில் சாயம்!! வெயிலில் பட்டினியாக பிச்சை எடுக்கும் பிஞ்சு குழந்தை… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…

English Summary

woman-threw-away-the-new-born-baby

Next Post

கவனம்... குடிக்க ஜூஸ் கொடுத்து, சிறுமி பலாத்காரம்!!!

Thu Nov 21 , 2024
school-girl-was-raped-by-a-young-man

You May Like