fbpx

திக்.. திக்.. நிமிடங்கள்.! அயோத்தி ரயிலில் இறந்த உடலுடன் 13 மணி நேர பயணம்.! சோகமான முடிவு.! பயணிகள் அதிர்ச்சி.!

அகமதாபாத்தில் இருந்து அயோத்தி செல்லும் சபர்மதி விரைவு ரயில் வண்டியில் பெண் ஒருவர் தனது கணவரின் இறந்த சடலத்துடன் 13 மணி நேரம் பிரயாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

அகமதாபாத்தில் இருந்து அயோத்தி நகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏறினார். ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் அவர் தனது மனைவியின் அருகில் உறங்கி விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முற்பட்டுள்ளனர். அப்போதும் அவர் எழும்பவில்லை. இதனால் அவர்களிடையே பதற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் எழுப்பவும் முற்பட்டுள்ளனர் அப்போதும் அந்த நபர் விழிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவரை சோதித்துப் பார்த்ததில் அந்தப் பயணி உயிரிழந்து விட்டார் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைக் கேட்டு அவரது மனைவி மற்றும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்ததோடு மிகவும் சோகமாகினர்.
இதனைத் தொடர்ந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் ஜான்சி ரயில் நிலையத்தை அடைந்ததும் காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களின் நிலையில் அவரது உடல் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

பின்னர் அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் உடலை ஜான்சி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தனது கணவர் இறந்தது தெரியாமலேயே அவருடன் 13 மணி நேரம் அவரது மனைவி பயணம் செய்திருக்கிறார். இங்கு நடந்த சம்பவத்தை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

Next Post

"ராமர் கோவிலை தகர்ப்போம்..."! வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.! இருவர் கைது.! அதிரடிப்படை தீவிர நடவடிக்கை.!

Thu Jan 4 , 2024
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவில் வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்க இருக்கிறது. இன்னிலையில் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் ஒடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக இந்தியாவே தயாராகி வரும் நிலையில் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து […]

You May Like