fbpx

“40 வயசுல, 20 வயசு பையன் கேக்குதா” காதலனுக்காக பெண் செய்த காரியம்..

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான வெங்கடேஷ். மினரல் வாட்டர் கம்பெனி ஊழியரான இவர், குண்டூரில் உள்ள பல இடங்களுக்கு தண்ணீர் கேனை எடுத்துச்செல்வார். ராமிரெட்டிதோட்டா பகுதியை சேர்ந்தவர் 40 வயதான ராதா. இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், இவரது மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷுக்கும், ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து, ராதா என்னை திருமணம் செய்து கொள் என கேட்டுள்ளார். இதற்க்கு ஒப்புக்கொண்ட வெங்கடேஷ், ராதாவுடன் ‘லிவிங் டூ கெதரில் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, வெங்கடேஷ், ராதாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரது பெற்றோரிடம், “அவர் வேலை கிடைக்காமல் உள்ளார். எனவே நமது வீட்டில் சில மாதங்கள் தங்கிவிட்டு செல்லட்டும்’ என கூறியுள்ளார்” இதையடுத்து, வெங்கடேஷின் வீட்டில் தங்கிய ராதா, நள்ளிரவு நேரங்களில் வெங்கடேஷூம் உல்லாசமாக இருந்துள்ளனர்.

ஆனால் ராதா-வெங்கடேஷின் நடவடிக்கை மீது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷின் பெற்றோர், ராதா வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்க்கு ராதா மறுத்துள்ளார். ஆனால் வெங்கடேஷூம் ராதாவை வெளியே விரட்டியுள்ளார். இதையடுத்து, ராத இது குறித்து குண்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வெங்கடேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஆத்திரம் அடங்காத ராதா, வெங்கடேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று கூலிப்படையை சேர்ந்த 3 பேருடன் சென்று, வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும், ஆசிட்டை வெங்கடேஷ் மீது வீசியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்துள்ளனர். அப்போது, வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் வெங்கடேஷை குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குண்டூர் போலீசார் வழக்குப்பதிந்து ராதா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Maha

Next Post

சென்னையில் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுவிப்பு…!

Thu Oct 5 , 2023
சென்னையில் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்து கைதான இடைநிலை ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர். சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 3 விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர். டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர். அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம் […]

You May Like