நெல்லை மாவட்டம், களக்காடு பெருமாள் கோயில் அருகில் உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் மற்றும் இரு மகன்களை பிரிந்து வாழும் மாலினி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மாலினியின் மகன் புவனேஸ்வரன் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், புவனேஸ்வரனை அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் காதலித்து வருகிறார். இது குறித்து மாலினிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாலினி தனது மகனை காதலிக்கும் சிறுமியை தனியாக அழைத்து கண்டித்ததோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து திருநங்கையான தனது அண்ணன் இசக்கி பாண்டியன் என்பவருடன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கி பாண்டி, குலசேகரப்பட்டினத்தில் உள்ள சக திருநங்கைகளான 3 பேரை அழைத்துக்கொண்டு மாலினி வீட்டிற்க்கு சென்று தகராறு செய்துள்ளனர்.மேலும், மாலினியை கம்பியால் தாக்கி, ஆடைகளை கிழித்து தரதரவென அப்பகுதி வழியாக தெருவில் இழுத்துச் சென்றுள்ளனர். இதனை அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து மாலினி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இசக்கி பாண்டி உள்ளிட்ட நான்கு திருநங்கைகளை தேடி வருகிறார்கள். இதனிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாலினி, போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், கட்டாயப்படுத்தி தன்னிடம் சமாதானமாக போகுமாறு கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
Read more: “எவன் கூட டி, இவ்ளோ நேரம் பேசுற”; கிச்சனில் இருந்த கரண்டியால், கணவன் செய்த காரியம்..