fbpx

தாயிடம் பழகிய முதியவருடன், மகள் உல்லாசம்; விடுதி அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் 60 வயதான ஜோதி. இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயதான சசிகலா என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், சசிகலாவின் 2வது மகள் 27 வயதான ரம்யா, அவரது கணவனை விட்டு பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, ஜோதிக்கும் ரம்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜோதியும், ரம்யாவும் வேளச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு வைத்து, ரம்யா 4 பீர் பாட்டில்களை குடித்துள்ளார். பின்னர் போதையில் இருந்த ரம்யா, ஜோதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் திடீரென ரம்யாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவரை அழைக்க வேண்டாம் என்று அவர் கூறி உள்ளார். மேலும், நேற்று காலை 2 பீர் பாட்டில்களை அவர் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதி, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ரம்யாவை பரிசோதித்த மருதுவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Read more: இரயில் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்த புதுமணப்பெண்..!! கொதித்த நெட்டிசன்கள்!

English Summary

woman-was-dead-after-having-sexual-relationship-with-an-old-man

Next Post

பெற்றோர்களே கவனம்!!! டீயில், பிஸ்கட் தொட்டு சாப்பிட்ட 3 வயது குழந்தை மரணம்...

Mon Nov 25 , 2024
3-years-old-girl-was-died-after-eating-biscuit-dipped-in-tea

You May Like