உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பவானா கிராமத்தில் 21 வயதான இளம் பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண் தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிகபட்டது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன பெண்ணுடைய சகோதரியின் கணவரான ஆதிஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் ஆதீஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதிஷ், காணாமல் போன பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண், இதற்கு மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆதீஷ், தனது கொளுந்தியாவை வீட்டில் இருந்து வெளியேறச் செய்து, தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அவரின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து, எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை மீட்ட போலீசார், தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, போலீசார் ஆதிஷை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
Read more: “கணவன் வேண்டாம், கணவனின் கிட்னி தான் வேணும்” கள்ளக்காதலுக்காக மனைவி செய்த காரியம்..