தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கைலாசப்பட்டி அம்பேத்கர் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் 38 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவருக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல், நேற்று மாலை அந்தப் பெண் தனது வீட்டின் முன் அமர்ந்து பாத்திரம் கழுவி உள்ளார்.

அப்போது, அந்த வழியாக தென்கரை பேரூராட்சி வி.சி.க துணைச் செயலாளர் சங்கையா அங்கு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த அந்தப் பெண் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
தனது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பெண்ணின் கணவர் வீட்டிற்குள் இருந்த வெளியே வந்து அந்தப் பெண்ணை காப்பாற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கிருந்து தப்பிக்க முயன்ற வி.சி.க நிர்வாகி சங்கையாவை பிடித்து தென்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, வி.சி.க நிர்வாகி சங்கையா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த தென்கரை காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் வெளியே அமர்ந்து பாத்திரம் கழுவிய பெண்ணிற்கு வி.சி.க. நிர்வாகி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது.