fbpx

“புருஷன தவிர வேற எவன் கூடவும் பைக்ல போக கூடாது”; நடு ரோட்டில் கணவன் செய்த கொடூர செயல்..

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்கார நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு மகள் மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிருந்தா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மணிகண்டனையும் அவரது பிள்ளைகளையும் விட்டு பிரிந்து நாமக்கல்லில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது, நாமக்கல் மோகனூர் சாலையில், பிருந்தா வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அவரது மனைவி சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து பிருந்தாவை, தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் தலையில் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் பிருந்தா சாலையில் சரிந்து கீழே விழுந்துள்ளார். மேலும், சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பிருந்தாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை தவிர வேறு யாருடனும் பைக்கில் தனது மனைவி செல்ல கூடாது என்று நினைத்த கணவன் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: “என்னோட பொண்ணு பண்ண இந்த காரியத்த என்னால ஜீரணிக்க முடியல”; பாக்கியாஜ் பகிர்ந்த தகவல்..

English Summary

woman-was-stabbed-with-screw-driver-by-her-husband

Next Post

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆ? 68 ஆ?... நீதிமன்றம் சரமாரி கேள்வி...!

Wed Nov 20 , 2024
Is the number of people who died from drinking bootleg liquor in Kallakurichi 67? 68? Is there any confusion about that?

You May Like