சமீப காலமாக கள்ளத்தொடர்பு சம்பந்தமான செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் கள்ளத்தொடர்பபில் இருந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹோட் மாவட்டத்தில் 30 வயதான பழங்குடியின பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், இவரது கள்ள உறவு குறித்து அவரது மாமனார் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்தப் பெண்ணிற்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்துள்ளனர்.
அதன் படி, அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை அரை நிர்வாணப்படுத்தி மோட்டார் சைக்கிளில் கட்டி, சாலையில் இழுத்துச் சென்று கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூகவளைதலத்தில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசாரின் கவனத்திற்கு இந்த வீடியோ சென்றுள்ளது.
இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: “கணவன் வேண்டாம், கணவனின் கிட்னி தான் வேணும்” கள்ளக்காதலுக்காக மனைவி செய்த காரியம்..