fbpx

ஹாஸ்பிட்டல் செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்..!! காட்டுக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை..!!

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண்ணை காட்டுக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே வாய்க்கால் பட்டறையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மலர் (43). இவர், கடந்த 25ஆம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். மலர் சேலம் சென்றடைந்த நிலையில், ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாக போனில் தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது, அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் மலர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர். ஆனால், அங்கு வரவில்லை என தெரிந்ததும், காவல்நிலையத்தில் கணவர் புகாரளித்தார். கடைசியாக மலர் யாரிடம் போனில் பேசியுள்ளார் என்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அதில், மலரிடம் கடைசியாக பேசியது, கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்த பூண்டு வியாபாரி கனகராஜ் (32) என்பது தெரியவந்தது. இவர், பெயர் கன்னங்குறிச்சி ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து, போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. பூண்டு வியாபாரம் செய்துவரும் கனகராஜுக்கும், மலருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 25ஆம் தேதி கனகராஜை பார்ப்பதற்காக கோரிமேட்டுக்கு மலர் சென்றுள்ளார். அங்கு கூட்டாளி சக்திவேலுடன் குடிபோதையில் சென்ற கனகராஜ், மலரை காட்டுக்குள் அழைத்துச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அங்கேயே வைத்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், முட்புதரில் நிர்வாண நிலையில் கிடந்த மலரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Read More : செல்போனே தேவையில்லை..!! 2025இல் மூளையின் அலைகள் மூலம் மற்றவர்களிடம் பேசலாம்..!!

English Summary

The shocking incident of a woman being gang-raped and murdered in a forest after claiming to be going to the hospital has left many shocked.

Chella

Next Post

பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி!. கேரளாவில் சோகம்!

Tue Dec 3 , 2024
Bus-car head-on collision accident!. 5 medical students killed! Tragedy in Kerala!

You May Like