fbpx

கவனம்..! இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்…! தவறினால் ரூ.50,000 அபராதம்…!

சென்னையில் பல்வேறு மகளிர் விடுதிகள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாக தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. இந்த நிலையில் அதனை சரி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை இன்று மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச் சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச் சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் மூலமாக இன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

குஞ்சுகளை கருவில் சுமக்கும் தந்தை விலங்கு!… எத்தனை புயல் வந்தாலும் ஒன்னும் செய்யமுடியாது!… கடற்குதிரைகள் பற்றிய சுவாரஸ்யம்!

Mon Oct 30 , 2023
கடற்குதிரை(Sea horse) என்பது கடலில் வாழும் ஒரு வகை மீனாகும். இதில் மொத்தம் 46 வகைகள் உள்ளன. பிற மீன்களைப் போலவே இதற்கும், செவுள்களும், துடுப்புகளும் உள்ளன. எனினும் இது மீனைப் போல் வடிவம் கொண்டதன்று. தலைப்பகுதி குதிரையைப் போன்று இருப்பதால் இது கடல் குதிரை என்றழைக்கப்படுகிறது. இப்போகாம்பசு என்பது இதனுடைய அறிவியல் பெயராகும். கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும், சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் […]

You May Like