அரியலூர் மாவட்ட பகுதியில் பிலிச்சுகுழி கிராமத்தில் கண்ணன் தனது மனைவி சுகுணாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சென்ற 20 நாட்களுக்கு முன் கண்ணன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், கணவன் – மனைவி ஆகியோர்க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை நேரத்தில் கண்ணன் மற்றும் பிள்ளைகள் தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில், வீட்டில் தனியாக இருந்த சுகுணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சுகுணா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சுகுணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.