fbpx

பெண்களுக்கு குட் நியூஸ்…! மானியம் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி புதிய இணையதளம்…! மத்திய அரசு அறிவிப்பு…!

ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும்.

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பெண் விஞ்ஞானிகள் மட்டுமே மானியம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்றும் தெரிவித்தார். ஆராய்ச்சிக்கான உதவித்தொகை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை வழங்கப்படும்.

2 கோடி பிரதமர் ஆவாஸ்-கிராமின் பயனாளிகளில் 68% பெண்கள் மற்றும் 23 கோடிக்கும் அதிகமான முத்ரா கடன்கள் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. NFHS-5 கணக்கெடுப்பின்படி, முதன்முறையாக, இந்தியாவில் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்களாக உயர்ந்துள்ளது, என்றார்.

Vignesh

Next Post

Wow... போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம் உள்ளே...

Fri Mar 10 , 2023
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற இலவச வகுப்பு நடத்தப்படும் என அரியலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு […]

You May Like