fbpx

மகளிர் உரிமைத் தொகை..‌.! அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும்…! அமைச்சர் தகவல்…!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு பலர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை புதிய அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; குடும்ப அட்டைகளை உணவுத்துறை வழங்குகிறது. கடைகளை கூட்டுறவுத் துறை நடத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக குடும்ப அட்டை வழங்கப்படவில்லையே. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தார்கள். ஆகவே, குறிப்பிட்ட காலத்துக்கு குடும்ப அட்டை விநியோகத்தை நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது. எனவே, சில ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு அதன் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த ஜன.31-ம் தேதி வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Vignesh

Next Post

பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்ததை போல ஆண்களுக்கும் வழங்க வேண்டும்...! அன்புமணி ராமதாஸ்

Thu Feb 8 , 2024
தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்ததை போல ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாக இடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்; தமிழகத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து சென்றவர்கள் தற்போது 75 சதவீதம் பேர் கார்களில் பயணம் செய்கின்றனர். நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்ததை போல ஆண்களுக்கும் […]

You May Like