fbpx

மகளிர் உரிமைத்தொகை: கள ஆய்விற்கு வருபர்களிடம் உரிய தகவல்களை அளிக்க வேண்டும்..! இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்…!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மகளிர் உரிமையைத்தொகை செம்படம்பர் மாதம் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த உரிமைத்தொகை பெற இதுவரை 1.48 கோடி விண்ணப்பித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் எப்போது நடைபெறும் என தகவலையும் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் “பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிவித்துள்ளது.

Kathir

Next Post

ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கணிசமாக குறைவு...! மத்திய அரசு தகவல்

Thu Aug 10 , 2023
ரயில்வேயில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மாநில வாரியாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ளது. 2021 வரை கிடைக்கக்கூடிய என்.சி.ஆர்.பி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன. கோவிட் – 19 இன் தொடக்கம் காரணமாக பயணிகள் ரயில் இயக்கம் கடுமையாக குறைக்கப்பட்டதால் 2020 […]

You May Like