fbpx

உலகிலேயே அதிக விலை மதிப்புடைய உணவுகள்.! என்னென்ன தெரியுமா.!

பொதுவாக உணவுகள் என்றாலே விதவிதமாகவும், சுவையாகவும் சாப்பிடுவதற்கு பலருக்கும் பிடித்தமானதாக இருந்து வருகின்றது. அப்படியிருக்க ஒவ்வொரு நாடுகளிலும் கிடைக்கும் அதிக விலை மதிப்பான மற்றும் சுவையான உணவுகளை குறித்து இந்த செய்தியில் தெளிவாக பார்க்கலாம்.

1. உலகிலேயே அதிக விலைமதிப்பான காபியாக கருதப்படுவது கோபி லோவாக் என்று அழைக்கப்படும் காபி தான். காபி தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகையான கொட்டையை புனுகு பூனை சாப்பிட்டுவிட்டு மலம் கழிக்கும் அந்த மலத்திலிருந்து காபி கொட்டையை எடுத்து தயாரிக்கப்படுவது தான் இந்த காபி. இதுதான் உலகிலேயே அதிக விலை மதிப்பான காபி என்று கூறப்பட்டு வருகிறது.
2. வெள்ளை டிரபுள் – இது ஒரு வகையான காளானை போன்றதாகும். மண்ணுக்கு அடியில் பாக்டீரியாக்களால் உருவாகும் ஒரு வகை உணவு பொருளாகும். குறிப்பிட்ட சீசனில் அடர்ந்த காட்டுக்குள் மட்டுமே கிடைக்கும் என்பதால் இதன் சிறிய பகுதி மட்டும் 1000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு உலகிலேயே விலைமதிப்பான உணவுப் பொருளாக உள்ளது.
3. வாக்யூ மாட்டுகறி – வாக்யூ என்று அழைக்கப்படும் ஜப்பானிய வகை மாட்டின் கறி உலகிலேயே மிகவும் விலைமதிப்பானது என்று கூறப்பட்டு வருகிறது. இந்த குறிப்பிட்ட மாடுகளின் எண்ணிக்கை உலகிலேயே குறைந்த அளவு தான் உள்ளது என்பதாலும், இதற்கு தரப்படும் உணவுகள் கொழுப்பு சத்து வாய்ந்தவையாக இருப்பதாலும், பீர் போன்ற ஆல்கஹாலை இதற்கு தருவதன் மூலம் இந்த கறி சுவை மிகுந்தவையாக உள்ளது. இதனால் இந்த  வாக்யூ மாட்டுக்கறி அதிக விலை மதிப்புடையதாக கருதப்பட்டு வருகிறது.
4. மீன் முட்டை – அல்பைனா பெலுகா என்ற அரிதான மீனின் முட்டையை வைத்து செய்யப்படும் உணவு தான் உலகிலேயே அதிக விலைமதிப்பானதாகும்.
5. சாப்பிடக்கூடிய தங்கம் – கேக், ஐஸ்கிரீம், மற்றும் இனிப்பு வகைகளில் மேலே அலங்காரத்துக்காக வைக்கப்படும் தங்கம் போன்ற பேப்பர் தான் உலகிலேயே விலை மதிப்புடைய உணவுப் பொருள் என்று கூறப்பட்டு வருகிறது.
6. யுபாரி மெலான் – முலாம்பழம் போல் தோற்றத்தில் இருக்கும் இந்த யுபாரி மெலான் குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும் மிகவும் சுவையான பழமாக உள்ளது. இதனால் இது உலகில் விலை மதிப்புடைய பழமாக கருதப்பட்டு வருகிறது.
7. பிளாக் ஐவரி காபி – தாய்லாந்தில் கிடைக்கும் தாய் அரபிக் காபி கொட்டைகளை யானைகளை சாப்பிட வைத்து பின்பு அந்த கொட்டைகளை கழிவுகளில் இருந்து எடுத்து காபி பொடியாக உருவாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் பிளாக் ஐவரி காபி. யானையின் வயிற்றில் நடக்கும் புராசசினால் இந்த காபிக்கு சுவை அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டு வருகின்றது.
8. மட்ஸ்யூபா நண்டு – இந்த நண்டு வகைகள் ஜப்பானில் ஒரு சில தண்ணீர் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இதன் சுவை இனிப்பாகவும் மிகவும் கொழுப்பு சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். மிகக் குறிப்பிட்ட அளவு மட்டுமே இது கிடைப்பதால் உலகில் விலை அதிகமுடைய நண்டாக இருந்து வருகிறது. உலகிலேயே அதிக விலை மதிப்புடைய உணவுகளாக மேலே குறிப்பிடப்ட்டுள்ளவைகள் இருந்து வருகின்றன என்று கருதப்பட்டு வருகின்றன.

Baskar

Next Post

அதிரடியாக வந்த உத்தரவு...! மெடிக்கல் கடைகளில் இனி இந்த மருந்துகளை விற்பனை செய்ய கூடாது...!

Fri Feb 2 , 2024
அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம். 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-இன் படி குற்றமாகும். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு […]

You May Like