fbpx

ஜோ பிடன், ஜஸ்டின் டிரிடியூவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த மோடி..

உலகின் மிகவும் பிரபலமான தலைவர் தரவரிசை பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்

உலகளாவிய புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் குறைந்தது 75% இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவளித்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதல் 10 தலைவர்களின் பட்டியல்

  • நரேந்திர மோடி (இந்தியா) – 75%
  • ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (மெக்சிகோ) – 63%
  • அந்தோனி அல்பானீஸ் (ஆஸ்திரேலியா) – 58%
  • இக்னாசியோ காசிஸ் (சுவிட்சர்லாந்து) – 52%
  • மரியோ ட்ராகி (இத்தாலி) – 54%
  • மாக்டலேனா ஆண்டர்சன் (ஸ்வீடன்) – 50%
  • அலெக்சாண்டர் டி குரூ (பெல்ஜியம்) – 43%
  • ஜெய்ர் போல்சனாரோ (பிரேசில்) – 42%
  • ஃபுமியோ கிஷிடா (ஜப்பான்) – 38%
  • மைக்கேல் மார்ட்டின் (அயர்லாந்து) – 39%
  • ஜோ பிடன் (அமெரிக்கா) – 41%
  • ஜஸ்டின் ட்ரூடோ (கனடா) – 39%
  • இம்மானுவேல் மக்ரோன் (பிரான்ஸ்) – 34%
  • பெட்ரோ சான்செஸ் (ஸ்பெயின்) – 34%
  • ஜோனாஸ் கர் ஸ்டோர் (நோர்வே) – 30%
  • ஓலாஃப் ஸ்கோல்ஸ் (ஜெர்மனி) – 30%
  • கார்ல் நெஹாம்மர் (ஆஸ்திரியா) – 28%
  • மேடூயஸ் மோரோவெய்கி (போலந்து) – 26%
  • மார்க் ரூட்டே (நெதர்லாந்து) – 27%
  • போரிஸ் ஜான்சன் (யுனைடெட் கிங்டம்) – 25%
  • பீட்டர் ஃபியலா (செக் குடியரசு) – 22%
  • யூன் சியோக்-யூல் (தென் கொரியா) – 21%

கொரோனா தொற்றுநோயைக் கையாள்வது குறித்து விமர்சனங்கள் இருந்தபோதிலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தொற்றுநோயை சிறப்பாக கையாண்டாதாக பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் நம்புகிறார்கள். கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் மதிப்பீடு கடந்த 2020-ம் ஆண்டு 83% ஆக உயர்ந்தது, இரண்டாவது அலைக்கு மத்தியில் அவரது ஒப்புதல் மதிப்பீடு 65% ஐ எட்டியது..

இரண்டாவது அலையின் உச்சக்கட்டத்தின் போது அதிக பாதிப்பு பதிவாகியதால் நம்பிக்கை குறைந்ததாக தரவுகள் காட்டுகின்றன.. எனினும் ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவை சரியான திசையில் வழிநடத்துகிறது என்று குடிமக்கள் இப்போது நம்புகிறார்கள். 72% க்கும் அதிகமான இந்தியர்கள், பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சரியான திசையில் அழைத்துச் செல்கிறார் என்று நம்புகிறார்கள்.

கடந்த ஜனவரி மற்றும் கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிலும், பிரதமர் மோடி பிரபல உலகத் தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தார். மார்னிங் கன்சல்ட் தளம் தேர்தல்கள், தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், ஓட்டுப்பதிவு விஷயங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களை அளிக்கிறது. இந்ததளம் தினந் தோறும் 20,000-க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் விரிசல்? முதல்வரின் செயலால் புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பு..!

Sat Aug 27 , 2022
பாஜக – என்.ஆர். காங்கிரஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய […]
அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்..!! தீபாவளி வரை ஒத்திவைப்பு..!!

You May Like