fbpx

வீடியோ: ‘Chocos-ல்’ நெளிந்த புழுக்கள்..!! வருத்தம் தெரிவித்த ‘Kellog’s’ நிறுவனம்.!

‘cummentwala_69’ என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் சமீபத்தில் பதிவேற்றிய வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. கையில் சோகோஸை வைத்திருக்கும் நபர் ” நீங்கள் எங்களுக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவை வழங்க நினைக்கிறீர்களா.? என கெல்லாக்ஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்புகிறார். அதன் பிறகு அவர் கையில் வைத்திருக்கும் சோகோஸை காட்டும்போது அதில் ஒரு வெள்ளை நிற பொருள் ஊறுவது போன்று தெரிகிறது. ஆம் அவரது சோகோஸ் முழுவதும் புழுக்கள் நெளிகின்றன.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் இதற்கு பின்னூட்டம் இடுகை செய்து வருகின்றனர். அதில் கமெண்ட் செய்த ஒரு நபர்” பல வருடங்களுக்கு முன் எனக்கும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது. என்னுடைய சோகோஸில் புழுக்கள் உயிருடன் இருந்தன. அப்போது சமூக வலைதளங்கள் இல்லாததால் என்னால் இதனை தெரிவிக்க முடியவில்லை. அன்றோடு சோகோஸ் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்ட மற்றொரு நபர் ” உங்கள் வீடியோவை பார்த்ததும் என்னுடைய சமையலறைக்குச் சென்று அங்கிருந்த சோகோஸை திறந்து பார்த்தேன் நல்லவேளை என்னுடையதில் புழுக்கள் இல்லை” என நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நபர் பாக்கெட் உணவுகளை தவிருங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுங்கள் என பதிவிட்டுள்ளார். இன்னொரு இன்ஸ்டாகிராம் பயனர் “அதிக புரோட்டின் நிறைந்த உணவு மகிழ்ச்சியாக உண்ணுங்கள்” என நகைச்சுவையாக பதிவு செய்து இருக்கிறார் .

இந்த வீடியோ பதிவு வைரலாக பரவியதைத் தொடர்ந்து சோகோஸ் தயாரிப்பு நிறுவனமான ‘Kellogg’ இதற்கு பதில் அளித்து இருக்கிறது. இது தொடர்பாக பதிவு செய்துள்ள அந்த நிறுவனம் “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் கவலையைப் புரிந்துகொள்ள எங்கள் நுகர்வோர் விவகாரக் குழு உங்களைத் தொடர்புகொள்ளும். உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு இன்பாக்ஸ் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என பதிவு செய்திருக்கிறது.

Next Post

12 தொகுதிகளும் 30% வாக்குகளும்..!! உறுதியாக நிற்கும் அதிமுக..!! கை கொடுக்குமா எடப்பாடி யுக்தி..!!

Tue Feb 13 , 2024
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, வரும் மக்களவை தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகளுடன் இணைந்து களம் காண வியூகம் அமைத்து வருகிறது. ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக – பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் எந்த அணிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், பிளவுபட்ட அதிமுக – பாஜக கூட்டணியை ஒன்று சேர்க்கும் முயற்சியில் சில தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால், […]

You May Like