விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் ஜிம்மில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ் மேனுமான விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் கூட ஜேஸ்வால் லெக் சைடு தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதனை ரசிகர்கள் ஷேர் செய்த நிலையில் தற்போது ஜிம்மில் விராட் கோலி – அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடனம் ஆடியபோது விராட் கோலியின் கால் சுளுக்கியதை பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.