ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில், சர்மிளா மீது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் மீது அவரது வாகனத்தை மோதி, காலில் காயம் ஏற்படுத்தியதாகவும், போலீஸ் அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட ஷர்மிளாவை சந்திக்க சென்ற ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் அருகே நடந்த மோதலின் போது ஷர்மிளாவின் தாய் ஒய்.எஸ்.விஜயம்மாவும் ஒரு பெண் காவலரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.