fbpx

ஆமா, நாங்க பாஜகவின் ’பி டீம்’ தான்..!! ரஜினியை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் திமுக குடும்பம்..!! கடுமையாக விமர்சித்த சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “எங்கள் கட்சிக்குள் உள்ள பொறுப்பாளர்களுக்குப் பேசிக் கொள்கின்ற அந்தரங்கமான விஷயங்களை வெளியில் எடுத்துப் போடுவதால் என்ன பலன்..? அதனால் பெட்ரோல் விலை குறையப் போகிறதா என்ன..?ஆனால், அந்த அசிங்கமான வேலையை திமுக செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு பற்றிப் பேசினால் பலரும் இனவாதம் என்கிறார்கள். பாஜக கூட தங்களை இனவாதக் கட்சி என்று சொல்கிறது.

“நாங்கள் உண்மையிலேயே பாஜக பி டீம் தான். ஏனென்றால், திமுகவை எதிர்க்கிறோம் இல்லையா? அதனால் அனைவரும் பி டீம் தான். ரஜினி சந்திப்புக்குப் பிறகு பலரும் “நமச்சிவாயம் வாழ்க என்று சொல்வதைவிடச் சீமான் நாசமாகப் போகட்டும் என்று சொல்கிறார்கள். என்னை சங்கி என்கிறார்கள். காமராஜர் பச்சை தமிழன் என்றால் அவரது பேரன் மலையாளி ஆகிவிடுவானா..?

தமிழ்நாட்டில் ரஜினியைச் சந்திக்காதவர்கள் அரசியல்வாதி யார் இருக்கிறார்கள்? கருணாநிதியுடன் கூடவே ரஜினி இருந்திருக்கிறார். ஸ்டாலின் விழாவில்கூட ரஜினி பங்கேற்கிறார். வருடத்திற்கு 2 படங்களை வைத்து தயாரித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறது திமுக குடும்பம். மோடியை உதயநிதி ஸ்டாலின் உட்படப் பலரும் சந்தித்து இருக்கிறார்கள். என்னைப் பல முறை மோடியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி அழைத்த போதுகூட மறுத்திருக்கிறேன்” என ரெட் பிக்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் சீமான் பதிலடி அளித்துள்ளார்.

Read More : ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு..!! தமிழக அரசியல் களத்திற்கு பேரிழப்பு..!! தலைவர்கள் இரங்கல்..!!

English Summary

Who is the politician in Tamil Nadu who hasn’t met Rajini? Rajini has been with Karunanidhi.

Chella

Next Post

ரூ.1000 கோடி கிளப்பில் உள்ள நடிகர்கள் யார் யார்.. ? ரஜினி, விஜய், அஜித்லாம் லிஸ்ட்லயே இல்ல..!

Sat Dec 14 , 2024
How many films have grossed 1000 crores in India so far? Let's take a look in detail.

You May Like