பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

உங்களிடம் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு இருந்தால், அதில் உள்ள பல்வேறு நிதிப்பலன்கள் குறித்து பார்க்கலாம்.. உங்கள் ஜன்தன் கணக்கில் இருப்பு இல்லாமல் ரூ.10,000 பணத்தை எடுப்பது உள்ளிட்ட பல நன்மைகள் இதில் உள்ளன.. இதுகுறித்து பார்க்கலாம்.
ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது 10,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம். முன்னதாக, ஓவர் டிராஃப்ட் வரம்பு ரூ.5,000 ஆக இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், நீங்கள் நிபந்தனைகள் இல்லாமல் ரூ.2,000 வரை ஓவர் டிராஃப்டைப் பெறலாம். நீங்கள் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற விரும்பினால், குறைந்தது 6 மாதங்கள் ஜன் தன் கணக்கை வைத்திருக்க வேண்டும். கணக்கு 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், நீங்கள் ரூ.2,000 வரை மட்டுமே ஓவர் டிராஃப்டைப் பெற முடியும். மேலும், ஓவர் டிராப்டுக்கான வயது வரம்பை 60லிருந்து 65 ஆக உயர்த்தியுள்ளது.
PFMS websiteல் மூலம் உங்கள் கணக்கில் உள்ள தொகையைத் தெரிந்துகொள்ளமுடியும். 18004253800 ,1800112211 ஆகிய கட்டமில்லாத தொலைபேசி அழைப்பு மூலமும், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள மினிமம் பேலன்ஸ் குறித்த விபரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.