fbpx

மாதம் ரூ.400 கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம்…!

சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி சேலம் தளவாய்ப்பட்டி-திருப்பதி கவுண்டனுர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை(பாட்டு). நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வாரநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை சேர்க்கைக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணசலுகை அளிக்கப்படுகிறது.

இசைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்னை எதிரில், தளவாய்பட்டி திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் 636302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2906197, மற்றும் 94435 39772, 9994738883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திக்… திக்!… பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!… கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை!… பீதியில் மக்கள்!

Thu May 16 , 2024
Slovakia PM: ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ. இங்குள்ள ஹண்ட்லோவா நகரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். பின், ஆதரவாளர்களை சந்திப்பதற்காக கலாசார இல்லம் சென்றுள்ளார். அப்போது, மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிரதமர் ராபர்ட் பிகோவை […]

You May Like