fbpx

மாணவர்கள் NMMS தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2024-2025-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS), 22.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 24.01.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள்;- மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in எனும் இணையதளம் வழியாக இன்று முதல் 25.01.2025 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS-ன் அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐ பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினை பதிவு செய்தவுடன் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். முதன் முறையாக இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் புதிய பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு (Register) செய்த பின் புதிய USER ID, PASSWORD-ஐ பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

English Summary

You can apply for the NMMS exam online from today.

Vignesh

Next Post

இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! தொடங்கி வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!! மக்களே உங்களுக்கு டோக்கன் வந்துருச்சா..?

Thu Jan 9 , 2025
Chief Minister M. Stalin will launch the Pongal gift distribution scheme in Ward 169, Saidapet, Chennai today.

You May Like