fbpx

#Scholarship: மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…! விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீடிப்பு…!

1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்புகள்‌ வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்…

தமிழ்நாட்டில்‌ மைய அரசால்‌ சிறுபான்மையினராரக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும்‌, 11-ஆம்‌ வகுப்பு முதல்‌ ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி தொழிற்கல்வி, பாலிடெக்னிக்‌, செவிலியர்‌ / ஆசிரியர்‌ பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள்‌ உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும்‌ மற்றும்‌ தொழிற்கல்வி மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும்‌ வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ (NPS) ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

தகுதியான மாணவ, மாணவிகள்‌ பள்ளி படிப்பு கல்வி உதவித்‌ தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும்‌, பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும்‌ வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும்‌ இணையதளத்தில்‌ இந்திய அரசின்‌http://www.scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்க கல்வி நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 15.10.2022 வரையிலும்‌, பள்ளி பேற்படிப்பு தகுதி மற்றும்‌ வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 15.11.2022 வரையிலும்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது .

இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, எண்‌.32, சிங்கார வேலர்‌ மாளிகை, இரண்டாவது தளத்தில்‌ இயங்கும்‌ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்‌. சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள்‌ மேற்படி கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில்‌ ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சோகம்... ஆன்மீக சுற்றுலாவின் போது 6 பேர் உயிரிழப்பு...! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்...!

Wed Oct 5 , 2022
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில்; ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம்… மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ், பிருத்விராஜ், ஸதாவீதுராஜா பிரவீன்ராஜ் என்ற வயது 19 இளைஞர், ஈசாக் மற்றும் செல்வன். அண்டோ கெரிமஸ் ரவி ஆகிய […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like