எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; 2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், தேவைப்படும் சான்றிதழ் நகல்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக துறைகளுக்கு இயக்குனர், மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை – 600 025 என்ற முகவரிக்கும், அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு முதல்வர், கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரிக்கும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.