fbpx

கவனம்…! 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் 17-ம் தேதி வரை மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யலாம்…!

தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் 24-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 12 முதல் 17-ம் தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 19 முதல் 24-ம் தேதி வரையும் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவுசெய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நாளை முதல் 17-ம் தேதி வரை தேர்வுத் துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அதில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும் என்பன உட்பட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

Vignesh

Next Post

மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்?… தொடர் வன்முறை சம்பவங்களால் நடவடிக்கை!… முதல்வர் பிரேன்சிங் தகவல்!

Sun Feb 4 , 2024
தொட்ர்ந்து வன்முறை சம்பவங்கள் நீடித்துவருவதால் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் என அவ்வபோது கொல்லப்படுகின்றனர். இந்த மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் […]

You May Like